Articles of BJP Leaders in Tamil - free eBook

Translations by Swamy Sreedharan.V.K.

பாஜக தலைவர்களின் கட்டுரைகள் 
- தமிழில்
வணக்கம்ஜி,

நான் பாஜகவில் சேரும் முன்பு, மோதி பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட காலத்தில், கட்சியின் அதிகாரபூர்வ முகநூல் பக்க மேலாளர் ஸ்ரீ.தமிழ்த்தாமரை வெங்கடேஷ்  (அந்நாள்  IT Cell பொ.செ.) அவர்களை தொடர்புகொண்டபோது, சில மொழிபெயர்ப்பு பணிகளை வழங்கி, பின்னர் முகநூல் பக்கத்திற்கும் மேலாளராக்கினார். அப்போது மொழிபெயர்ப்புகளுடன், ஃபோட்டோ கார்ட்டூன்களையும்  தயாரித்து முகநூல் பக்கத்தில் பதிவேற்றினேன். பின் அவருடைய அறிவுரையின்பேரில் கட்சியில் இணைந்து கொண்டேன்.

பாஜகவின் தேசிய வலைத்தளத்தில் (bjp.org) 'வழிகாட்டும் தீபங்கள்' எனும் தலைப்பில், கட்சியின் நான்கு முன்னணித்தலைவர்களை பற்றிய கட்டுரைகள் உள்ளது. அவற்றை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை அப்போது பெற்றேன். அவை நம் மாநில அதிகாரபூர்வ வலைத்தளத்தில் (bjptn.org) பதிவிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர்களான  ஸ்ரீ.அத்வானிஜி, ஸ்ரீ,அருண் ஜேட்லிஜி ஆகியோர்  வலைத்தளங்களில் எழுதிய கட்டுரைகளையும், கட்சி சார்பான செய்திக்கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தேன். இவ்விருவரின் ஆழ்ந்த தொலைநோக்கு கொண்ட,நேர்மையான எழுத்துக்களை தமிழ்மட்டுமே படிக்கக்கூடிய நம் 'ஜி'க்கள் படித்தறிய வேண்டும் என்பதே இம்மின்னூல் தொகுப்பின் முதன்மை நோக்கம்.

இக்கட்டுரைகளை தொகுக்கவேண்டும் எனும் நீண்ட கால விருப்பம், இந்த கொரொனா லாக்டௌன் காலத்தில்தான் கைக்கூடியுள்ளது. படித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். விரும்பினால் நன்கொடையளிக்கவும்:. கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள்!

இந்த என் முதல் மின்னூல், என் நண்பரும் கட்சியின் சிறந்த கார்யகர்த்தாவுமான
ஸ்ரீ.சௌந்தரராமன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
நன்றி.

என்றும் தேசப்பணியில்,
ஸ்வாமி ஸ்ரீதரன் வே க
ஒன்றிய துணைத்தலைவர்,
திருவள்ளூர் தெற்கு மண்டல் பாஜக,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
14-04-2020


File format: PDF, Size: 3mb









Tags: eBook, PDF, BJP, Leaders, Arun Jaitley, L KAdvani, Articles, Blog, News, Reports, Tamil, Translation, Swamy Sreedharan.V.K., தமிழாக்கம், மொழி பெயர்ப்பு, தமிழில், ஸ்வாமி ஸ்ரீதரன்.வே.க., தமிழ், பாஜக, தலைவர்கள், அத்வானி, அருண் ஜேட்லி, கட்டுரைகள், வலைப்பூ, பாரதிய ஜனதா கட்சி, செய்தி, மின்னூல்,